கணவனுடன் வாழ மறுத்த மகள்… தனியாக அழைத்துச் சென்று பேசிய தந்தை… அடுத்து நடந்த யாரும் எதிர்பார்க்காத பயங்கர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தில் மாசு காளை என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி உள்ள நிலையில், இவர் போடி தேனி நெடுஞ்சாலை பங்காரு சாமி கண்மாய் நுழைவுப் பகுதியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மார்கையின் கோட்டையிலிருந்து வந்த பிரவீனா முதலில் தன்னுடைய தாய் மாமனை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. முதல் கணவரை பிரிந்து பத்து வருடங்களுக்கு முன்பு கோடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாசு காளை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன் இரண்டாவது கணவனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரவீனா மார்கழி எண் கோட்டையில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். பிரவீனாவின் தந்தையான தங்கையா வீட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பிரவீனா தன் தந்தை வீட்டுக்கு வருவதாக கூறிய போது இதனைப் பற்றி பேசுவதற்கு போடி பங்காருசாமி கண்மாய் அருகே பிரவீனாவை வரவழைத்தார். அங்கு வந்த மகளை மீண்டும் கணவர் வீட்டுக்கே சென்று விடு என்று தந்தை கூறியுள்ளார்.

   

இதனை பிரவீனா சற்றும் ஏற்காமல் இருந்த நிலையில் தங்கையா பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார். பூச்சி மருந்து அருந்திய பிரவீனா சாகவில்லை என்று தெரிந்ததும் மீண்டும் அவருடைய கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். போலீசார் கைபேசி அழைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிரவீனாவின் தந்தை தான் கொலையாளி என உறுதி செய்தனர். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.