திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்ற பெண்ணை அருள்பாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அருள் பாண்டிக்கும் அம்முவின் நெருங்கிய உறவினரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் அருள் பாண்டி அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 22-ஆம் தேதி அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த அருள் பாண்டி இனிமேல் இவள் என்னுடன் தான் வாழ்வார் என அம்முவிடம் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அம்மு இரவு நேரம் மாடிக்கு சென்ற விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அம்முவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அருள்பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
