அடேங்கப்பா…! மொத்தம் 1000 கிலோ எடை…! வலையில் சிக்கிய நாகப்பாம்பு சிலைகள்…. அதிர்ந்த மீனவர்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

கேரள மாநிலம் அழிக்கல் கடப்புரம் பகுதியில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க படையில் சென்றனர். அப்போது ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அதில் அதிக எடையில் ஏதோ சிக்கியது தெரிந்தது. உடனே அவர் வலையை இழுத்த போது 2 நாகசலைகள் வலையில் இருந்தது தெரியவந்தது. 1 1/2 அடி உயரமுள்ள நாக சிலைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசாக் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பித்தளையால் செய்யப்பட்ட அந்த இரண்டு சிலைகளையும் போலீசார் நீட்டனர். அவை எப்படி கடலுக்குள் வந்தது? யாராவது திருடி கடலில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று இலங்கை அம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர் தேசிய வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் எடை ஆயிரம் கிலோவுக்கு அதிகமாக இருந்ததாம். இதனால் அனைத்து மீனவர்களும் சேர்ந்து போராடி மீனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.