நடத்தையில் சந்தேகம்… 2வது மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2வது கணவர்… குலை நடுங்க வைக்கும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா டவுன் பகுதியை சேர்ந்த ரேகா(30) என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரேகா தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த லோகேஷ் என்பவருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லோகேஷும் திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்தவர். இந்நிலையில் ரேகாவுக்கும் லோகேஷக்குமான பழக்கம் காதலாக மாறிய நிலையில் தீவிரமாக காதலித்து வந்தனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

தனது கணவர் லோகேஷ் மற்றும் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுடன் ரேகா பெங்களூரில் குடியேறினார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் லோகேஷையும் டிரைவராக வேலைக்கு சேர்த்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரேகாவுக்கும் அவரது கணவர் லோகேஷ் கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரேகாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் லோகேஷ் தகராறு செய்துள்ளார். நேற்று காலை இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே வீட்டிலிருந்தே வேலைக்கு புறப்பட்ட ரேகா அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

   

அப்போது அங்கு கத்தியுடன் வந்த லோகேஷ் ரேகாவை 11 முறை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேகா உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள லொகேஷன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது