செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் குறித்தும், பிரதமர் குறித்து பேசும்போதும் கண்ணியமாக பேசவேண்டும். பின்புலத்தில் அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசி வருகிறார். மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
விஜய் சினிமாவில் பேசுவது போல பேசுகிறார். இந்த அகந்தை இருக்கக் கூடாது. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பிரசாரத்திற்கு வந்தால் இப்படி நிபந்தனை போடுவீர்களா? CM சார் போட்டு பாருங்க” என்று விஜய் சொல்வதிலிருந்து அவர்கள் தான் அவரை இயக்குகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. விஜய்க்கு அரசியல் என்று நினைக்கிறேன். சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்” என்று கூறியுள்ளார்
