சமீப காலமாகவே சாட் ஜிபிடி மூலமாக தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இளம்பெண் ஒருவர் சாட் ஜிபிடி செயலியை பயன்படுத்தி லாட்டரி அடித்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட். இவர் லாட்டரி வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் இவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜிபிடியிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என்று கேட்டுள்ளார்.
அது குறித்த தகவலின் படி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு கோடியே 33 லட்சம் அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் வென்ற பணம் அனைத்தையும் தன்னுடைய இறந்த கணவரின் பெயரில் நன்கொடையாக வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
