“குஷியோ குஷி” 1 குழந்தை பெற்றால் 3 லட்சம், இரட்டை குழந்தை பெற்றால் 6 லட்சம்… அதிரடியாக அறிவித்த நாடு..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான்  1947 ஆம் வருடம் தனி நாடாக பிரிந்து சென்றுவிட்டது. இதனால்  தைவானை இன்றும் தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதியாக தான் சீனா கருதுகிறது. எனவே அதை மீண்டும் தன்னோடு இணைக்கும் முனைப்பில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதாவது கடந்த வருட நிலவரப்படி அந்த நாட்டில் மொத்தம் மக்கள் தொகை 2 1/2 கோடி.

எனவே நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தைவான். அதன்படி அங்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசு தொகையாக ஒரு லட்சமும், இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 2 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பரிசு தொகையானது ஒரு குழந்தை பெறுவோருக்கு மூன்று லட்சமாகவும், இரட்டை குழந்தைக்கு 6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.