துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025-ன் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானின் 172 ரன்கள் இலக்கை இந்தியா அடைந்து வெற்றியை கைப்பற்றியது. ஆனால் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் மீண்டும் தங்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்ததால் கவனம் விரைவாக மைதானத்திலிருந்து விலகிச் சென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் நிலை மோதலின் போது போட்டிக்குப் பிறகு வழக்கமாக கைகுலுக்கப்படுவதை இந்தியா மறுத்த நிலையில் இரண்டாவதாக இப்போதும் கைகுலுக்க மறுத்துள்ளது.
Wah uncle
Pakistani cricketers are bsdks doing this on the field but sha,me on Modi Gov
Sit down uncle— Sanatani Thakur 🇮🇳 (@SanggitaT) September 21, 2025
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாக்., வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் இந்தியாவுக்கு எதிராக 58 ரன்களை விளாசினார். அவரின் ஆட்டம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும், அவரின் மகிழ்ச்சி கொண்டாட்டம் விமர்சனத்தை பெற்று வருகிறது. அதாவது சிக்ஸர் அடித்து, அரைசதத்தை நிறைவு செய்த அவர், ரசிகர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை போல, சைகை செய்தார். நீங்க மகிழ்ச்சியை கூட இப்படித்தான் கொண்டாடுவீர்களா..? கிரிக்கெட் வீரராக இருந்தாலும் அவர்களின் ரத்தத்தில் இது போன்ற உணர்வு ஊறி கிடக்கிறது என இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்
