TVK தலைவர் விஜய் தன்னுடைய பரப்புரையில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் .சட்டசபை தேர்தலில் திமுகவிற்கும் TVKவிற்கும் தான் போட்டி என்று கூறுவதோடு முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருடைய கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு அமைச்சரின் பதிலும் வெவ்வேறாக இருந்ததால் கட்சி தலைமை அதிருப்தி அடைந்தது.
இனி விஜய் விமர்சித்து அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். ஏதாவது அவருக்கு பதில் அளிக்கும் நிலைமை ஏற்பட்டால் கட்சி தலைமையில் இருந்து அது வெளிவரும். அமைச்சர்கள் அனைவரும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று கூறினால் போதும் என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
