சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்தவர் ஹாரிஸ். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ஹாரிஸுக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது சங்கீதாவின் பெற்றோர் 100 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஹாரிசும், அவரது தாயும் இணைந்து மேலும் ஒரு பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், சங்கீதாவின் பெற்றோருக்கு சொந்தமான நிலம் என அனைத்தையும் கொடுக்க வேண்டும் என சித்திரவதை செய்துள்ளனர்.
அப்படி கொடுத்தால் தான் உன்னோடு வாழ்வேன் என ஹாரிஸ் சங்கீதாவை மிரட்டி தாக்கியுள்ளார். சங்கீதா தனது கணவரிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்காமல் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் சங்கீதா அண்ணா நகர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஹாரிசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
