தமிழ்நாடு அரசானது ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களை பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் எருமை உட்பட 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் 1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், குடும்பத்தில் ஒருவருக்கு கடன் வழங்கப்படும்.
