லிஸ்ட் ரெடி..! தவெகவில் முக்கிய மாற்றம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய விஜய்…!!

By Soundarya on புரட்டாதி 18, 2025

Spread the love

நடிகர் விஜய்சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை மாநாடு நடத்தினார். தற்போது பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தவெகவில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

அதன்படி, CTR நிர்மல்குமாருக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்புடன் ஐடி விங், வழக்கறிஞர் அணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகிய நான்கு பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.