அம்மா எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது… 16 வயது மகளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தார். தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளிக்கு செல்லாமல் திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு ஒரு தனியார் நூல் மில் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற அவர் அங்கு பணியாற்றிய 21 வயது வாலிபருடன் பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்துள்ளனர். இந்த நெருக்கமான உறவால் சிறுமி கர்ப்பமாகி எட்டு மாதம் ஆன நிலையில் குன்னூருக்கு வந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார்.

அவரது தந்தை உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதிக்கப்பட்ட போது சிறுமி எட்டு மாதம் கர்ப்பிணி என்றும் பிரசவ வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் அந்த வாலிபர் தற்போது துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.