சரிந்தது திமுகவின் கோட்டை…! கொத்தாக விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்… கடும் அப்செட்டில் ஸ்டாலின்..!!

By Soundarya on புரட்டாதி 18, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஒருபக்கம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். விஜய் ஒருபக்கம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இப்படி ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்கள். திமுக மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.