இனிமேல் பெண்களை எவனும் தொட்டுக் கூட பார்க்க முடியாது…! “ரசாயன முறை ஆண்மை நீக்கம்….” அதிரடி காட்டும் பிரித்தானிய அரசு….!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2025

Spread the love

பிரித்தானிய நீதித்துறை செயலர், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தில் பெண்களை சீரழிக்கும் நபர்களுக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

வடமேற்கு மற்றும் வடகிழக்கு இங்கிலாந்திலும் இந்த சோதனை முறை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் சுமார் 6,400 குற்றவாளிகளுக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யப்பட உள்ளதாக நீதித்துறை செயலர் டேவிட் லேம்மி கூறியுள்ளார். பிரித்தானியா முழுவதும் பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் விரைவில் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.