இன்றைய காலகட்டத்தில் பலரும் டீ குடிப்பவர்களாகவே இருக்கிறார்கள் .காலை எழுந்ததும் டீ, மாலையில் டீ என தங்களை சுறுசுறுப்பாக்குவதற்கு டீ குடித்து வருகிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். வயிற்றில் செரிமான அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அமிலங்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும் .அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் அது எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பிறகு முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்த்துக் கொள்வதால் செரிமான கோளாறுகளை தவிர்க்கலாம். தினமும் காலையில் டீ குடிப்பதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பல நோய்க்கு தீர்வாக அமையும். டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு தண்ணீர் குடிப்பது கஷ்டமாக இருந்தால் இளநீர் குடிக்கலாம், இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை வெளியேற்றும்,
நாம் விரும்பி குடிக்கும் டீயில் இருக்கும் காபின் விளைவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக வயிறு எரிச்சல், தலை சுற்றல், குமட்டல் ஆகிய பிரச்சினை இருக்கும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மை நீங்கிவிடும் என்று சொல்ல முடியாது. மாறாக டீயால் வரும் அமிலத்தன்மை இல்லாமல் போகும். டீ குடிப்பதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமில கார சமநிலையை சீராக வைத்துக் கொள்ளும். காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்துவிட்டு பிறகு எண்ணெய் உணவுகள், காரம், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
