“திட்டிய கணவர் குடும்பத்தினர்…” பெற்றோரிடம் சொல்ல ஓடோடி வந்த மகள்…. வீட்டில் கண்ட காட்சி…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் கடகம்பாடி பகுதியில் சேர்ந்தவர் ராஜ். இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதியினருக்கு கார்த்திகா, சுகந்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுகந்திக்கு குழந்தை இல்லாததால் அவரது கணவர் விட்டார் அவரை தரகுறைவாக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்காக சுகந்தி அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. உடனே பெற்றோரை பார்ப்பதற்காக சுகந்தி தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜூ மல்லிகாவும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

   

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது உடலுக்கு அருகிலேயே பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. எனவே குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.