வாங்கம்மா வாங்க, 2 பைக் சேர்ந்து இழுத்தாலும் கிழியாத பேண்ட்… வெறும் ரூ.399 மட்டுமே… கடைக்காரரின் வித்தியாசமான டெமோ வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

புதுமையான வியாபார யுக்திகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது இன்று பெரும் போட்டியாகவே உள்ளது. அப்படித்தான் ஜோத்பூரில் உள்ள ஒரு கடை தன்னுடைய லோயர் உறுதியை வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சாம்சன் என்ற அந்தக் கடை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு லோயரை இரண்டு மோட்டார் பைக்குகளுக்கு இடையே கட்டி பைக்குகளை வேகமாக இழுக்கும் போது கூட லோயர் கிழியாமல் தாங்கியது. இதனை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர். பொதுவாகவே கடைகள் துணி தர மற்றும் வடிவமைப்பை மட்டும் முன்வைத்து விற்பனை செய்வதுதான் வழக்கம்.

ஆனால் சாம்சன் கடை தங்களுடைய கிழியாத லோயரை நேரடியாக சோதனை செய்து காட்டியுள்ளது. வீடியோவில் இந்த லோயர் s முதல் XXL வரை பல அளவுகளில் மட்டும் நிறங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எப்போதும் கிழியாத லோயர் என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்துள்ளது. சாதாரணமாக துணி விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து விடாது. ஆனால் இந்த கடையின் புதிய யுக்தி சமூக வலைத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று சிறந்த விளம்பரம் முயற்சியாக மாறியுள்ளது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Prakash Sou பதிவைப் பகிர்ந்துள்ளார் (@brand.samsam)