ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி(86) என்ற மூதாட்டி ஒடிசாவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மூதாட்டி கஞ்சம் மாவட்டம் போலசரா பகுதியில் தங்கி இருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று மூதாட்டி கண் வழிக்காமல் இருந்துள்ளார். அவர் மூச்சு விடும் அறிகுறியும் இல்லை. இதனால் இயற்கையாக மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்து அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பின்னர் மூதாட்டியை வாகனத்தில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு சென்று எரியொட்டும் ஏற்பாடுகளை செய்தனர். அப்போது மயான பாதுகாவலர்கள் மூதாட்டியின் உடலை பார்வையிட்ட போது அவர் மூச்சு விடுவது தெரியவந்தது. உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
