பெங்களூருவில் ஒரு பெண், செப்டம்பர் 8 ஆம் தேதி, ஒரு ராபிடோ ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஓட்டுநர் ஹனுமந்தப்பா எச் தலவர் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையில் அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், “ஓட்டுநர் முதலில் தன்னைப் பாராட்டி, ஒரு திரைப்பட நடிகையுடன் ஒப்பிட்டார். பின்னர் அவர் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பது போல் காட்டி நெற்றியைத் தொட்டார். பின்னர் அவர் தனது மார்பைத் தகாத முறையில் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார்.
இறுதியில் அந்தப் பெண் அவரைத் தள்ளிவிட்டு, வீடு திரும்புவதற்காக ஆட்டோவிலிருந்து குதித்துள்ளார். அவர் தனது தாயாரிடம் தகவல் தெரிவித்து, காவல்துறையில் புகார் அளித்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஓட்டுநர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து ரேபிடோ நிறுவனம் கூறுகையில்,”பெங்களூரில் பதிவான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது யாரும் பாதுகாப்பற்றதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ உணரக்கூடாது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநர் தங்கள் தளத்திலிருந்து “நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, தடுப்புப்பட்டியலில்” சேர்க்கப்பட்டுள்ளதாக ரேபிடோ உறுதிப்படுத்தியது.
