“யாராவது வந்து காப்பாத்துங்க” வெள்ளத்தில் சிக்கி கூச்சலிட்ட நபர்கள்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!!

By Soundarya on புரட்டாதி 16, 2025

Spread the love

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், டான்ஸ் நதியில்  ஒரு டிராக்டரில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான வீடியோவில், “டிராக்டரில்  10 தொழிலாளர்கள் கொண்ட குழு ஒன்று ஆற்றில் சிக்கித் தவிக்கும் நிலையில் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையில், சிலர் ஆற்றின் கரையில் நின்று கொண்டு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், பலத்த நீர் ஓட்டம் காரணமாக, டிராக்டர் கவிழ்ந்தது, அதில் அமர்ந்திருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஆற்றின் நடுவில் எப்படி சிக்கிக்கொண்டார்கள் என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.