ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். அந்த கார் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்தனர். நேற்று இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இறுதி சடங்கு முடிந்த பிறகு மயானத்திற்கு வந்த 7 பேர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏழு பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மகேந்திர மாலி, பரத்திசந்த், மகேஷ் சர்மா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறுதி சடங்கிற்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர்களது இறுதி சடங்கில் பங்கேற்றவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
