தேனி மாவட்டம் சின்னமனூர் ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் என்பவருக்கு தீபா என்ற மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்களின் மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவன் சரியாக படிக்கவில்லை என்று கூறி பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என பள்ளியில் இருந்து அவனை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தன்னுடைய மகனின் படிப்பு பாழாகி விட்டதே என்று தீபா விரக்தியிலிருந்து உள்ளார். இதனிடம் ஏன் நேற்று முன்தினம் வழக்கம் போல செல்வம் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மகனும் வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தீபா ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு வீட்டுக்கு வந்த செல்வம் வீட்டின் அறை பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை தட்டி பார்த்தார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அது குறித்து தகவல் அறிந்து சம்பாவிடத்திற்கு வரைந்த போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
