“என்னால் அவனை மறக்க முடியல”.. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பெற்றோர்… 2 தோழிகளுடன் சேர்ந்து இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்… ஒட்டுமொத்த ஊரையே நடுங்க வைத்த சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவ துர்கா தாலுகா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் ரேணுகா (18). இவருடன் அதே கிராமத்தில் சுனிதா (17), திம்மக்கா (18) ஆகியோர் வசித்து வரும் நிலையில் 3 பேரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். உடனே இதனை அறிந்த கிராம மக்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரேணுகா ஒரு வாலிபரை காதலித்தது தெரிய வந்தது.

ஆனால் குடும்பத்தினர் வேறு ஒரு வாலிபரை பார்த்து திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததால் காதலனை மறக்க முடியாமல் தவித்த ரேணுகா தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அதேபோல மற்ற இரண்டு தோழிகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தங்களுக்கும் வேறு மாப்பிள்ளை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று நினைத்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.