மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை வெளியாகிறது… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தமிழகத்தில் தனி தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 17 நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதில் ESLC result 2025 என்பதை கிளிக் செய்து விவரங்களை பதிவிட்டு தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.