“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது”… பிடிவாதமாக நின்றதாய்… அந்த விஷயத்துக்காக கணவருடன் சேர்ந்து பெற்ற தாயையே கொன்ற மகள்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டம் பாலகுர்த்தி மண்டலம் பெத்ததண்டா பகுதியை சேர்ந்த பாகவதர் லட்சுமி (45) என்பவருடைய கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கூலி வேலை செய்து தன்னுடைய ஒரே மகள் சங்கீதாவை அவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாதாபுரம் கிராமத்தை சேர்ந்த வீரண்ணா என்பவரை மகள் விரும்பிய நிலையில் காதல் திருமணம் செய்து வைத்தார். இதற்கு வரதட்சணையாக தன்னிடம் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை விற்று வரதட்சனை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஒரு ஏக்கரில் அரை ஏக்கரை கணவரின் சகோதரிகளுக்கு கொடுத்துவிட்டேன். மீதம் இருந்து அரை ஏக்கரை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். அதையும் தனக்கே கொடுக்க வேண்டும் என்று மகள் வலியுறுத்திய நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை நிலத்தை கொடுக்க முடியாது என்றும் இறந்த பிறகு உங்களுக்கே சேரும் என்றும் லட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் தாய் இருக்கும் வரை நிலத்தைப் பெற முடியாது என்று கணவனுடன் சேர்ந்து நள்ளிரவில் தலையணையை முகத்தில் அழுத்தி தாயை சங்கீதா கொடூரமாக கொலை செய்துள்ளார்.

   

பிறகு ஒன்றுமே தெரியாதது போல கணவருடன் சேர்ந்து நாடகம் ஆடி அழுதுள்ளார். இந்நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையில் சொத்துக்காக மகள் மற்றும் அவருடைய கணவர் சேர்ந்து தாயை கொலை செய்தது தெரியவந்தது.. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.