இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மே கண்பார்வை பிரச்சனை என்பது பெரிதாக உள்ளது. இப்போது சிறு குழந்தைக்கு கூட கண்ணில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுவதால் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தூரத்தில் உள்ளவர்களை தெளிவாக பார்க்க, பார்வை திறனுக்கேற்ற கண்ணாடிகள், காண்டக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் ஒரு சொட்டு மருந்தை இரண்டு துளிகள் போட்டால் அதன் மூலம் இரண்டு வருடங்களுக்கு தெளிவான பார்வை கிடைப்பதாக டென்மார்க்கில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Pilocarpine, Diclofenac ஆகியவற்றால் இந்த சொட்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கண் கண்ணாடிகளுக்கு குட் பாய் சொல்லலாம்.
