உத்தரபிரதேச மாநிலம் ஜலான் பகுதியில் 21 வயது பெண் ஒருவர் தனது காதலனுடன் பாலியல் உறவு கொள்வதை கையும் களவுமாக பிடித்ததால், அந்தப் பெண்ணின் பாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது பாட்டியை கொலை செய்த வழக்கில் அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்த காதலன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், இன்னும் தலைமறைவாக உள்ளார். இருப்பினும், அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லவி என்ற பெண் தனது காதலன் தீபக்குடன் இரவில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு பரமா தேவி அறைக்குள் நுழைந்தபோது, இருவரும் ஒரு கட்டிலில் ஒன்றாக இருப்பதைக் கண்டார். பாட்டி தனது உறவை வெளிப்படுத்திவிடுவாரோ என்று பயந்து, பல்லவி பயத்தில் காதலன் தீபக்குடன் சேர்ந்து, தனது பாட்டியின் தலையில் அம்மி கல்லால் தாக்கியதால்,பாட்டி சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதிலிருந்து தப்பிப்பதற்காக பல்லவி “திருடன், திருடன்” என்று கூச்சலிட்டார். பின்னர் அவரது தந்தை அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார். ஆனால் விசாரணையில், உண்மை வெளிப்பட்டது. பல்லவி கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் அவரது காதலன் தீபக் தலைமறைவாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள தீபக், இந்தக் கொடூரமான கொலையில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.
