என்னுடைய மூளையின் மதிப்பு மட்டும் மாதம் 200 கோடி என்று ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எத்தனாலை ஒரு தூய்மையான மற்றும் மலிவான மாற்று எரிபொருளாக அரசு ஊக்குவித்து வரும் நிலையில், இது உணவு, நீர் பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் தேர்வு ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இரண்டு பெரிய எத்தனால் நிறுவனங்களை கட்கரியின் மகன்கள் நடத்துவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் தான் எத்தனால் பெட்ரோல் கலப்பதால் என்னுடைய குடும்பம் லாபம் ஈட்டுவதாக எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள அவர், பணத்திற்கு எனக்கு பஞ்சம் கிடையாது. என்னுடைய மூளையிலிருந்து வரும் யோசனைகள் மட்டுமே மாதம் 200 கோடி மதிப்புடையவை. பணத்திற்காக ஏமாற்றவோ அல்லது தவறு செய்யவோ எனக்கு அவசியமில்லை. எப்படி நேர்மையாகச் சம்பாதிப்பது என்பது எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
