நாக்பூரில் இந்தோரா டிகோரி மேம்பாலம் 998 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் அசோக் சதுக்கத்தில் ஒரு வீட்டின் பால்கனியை ஒட்டி மிக நெருக்கமாக மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கூறும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நோட்டீஸ் வந்தது.
இதற்கான இழப்பீடும் எந்த சரியான விளக்கமும் இல்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு தரப்பில் கூறும் போது அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பால்கனி சட்ட விரோதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அது இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் அந்த குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், கிண்டல் செய்யும் விதத்திலும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
Bizarre construction in Nagpur: Flyover passes through a home in the city. Being built by NHAI. #Nagpur #Maharashtra pic.twitter.com/izyjyvDCqc
— Drishti Sharma Mulak (@drishtisharma02) September 12, 2025
