“ஏய் அவன் எனக்கு தாண்டி”… பாய் ஃப்ரெண்டுக்காக சண்டை போட்ட பள்ளி மாணவிகள்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

டெல்லியில் உள்ள அமண் விஹார் பகுதியில் பயிலும் 15 வயது மாணவி தன்னுடைய வகுப்பு தோழியால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியை அவருடைய வகுப்புத் தோழி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மாணவியின் முகம் மற்றும் இடுப்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது மாணவிக்கு மருத்துவமனையில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் நடத்திய மாணவிக்கும் இடையே ஆண் நண்பருடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முன் பகையாகும். சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

   

ஆனால் போலீசாரின் செயல்பாடு தொடர்பாக குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதலில் புகாரை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மிகப்பெரிய கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் இளம் வயதிலேயே பெண்களிடையே இத்தகைய வன்முறை நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.