33 வயது ஆன்ட்டியும் 17 வயது சிறுவனும் செய்யும் வேலையா இது..? அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டத்தில் எரியோடு என்ற பகுதியில் அய்யம்மாள் 87 என்பவர் கூரைக் கொட்டகையில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். பெண் மற்றும் சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேர் டீக்கடைக்கு வந்திருந்தனர். அய்யம்மாளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே மிளகாய் தூள் எடுத்து கண்ணில் தூவியுள்ளனர். எரிச்சல் தாங்காமல் மூதாட்டி நிலைத்தடுமாறி கீழே விழுந்தவுடன் கழுத்தில் இருந்த மூணு பவுன் தங்கச் சங்கிலியை  பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி விட்டனர். மூதாட்டி அழறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரினால் முகத்தை கழுவிவிட்டு காவல் நிலையத்துக்கு விரைந்தனர்.

வழக்கு பதிவு செய்து தனிப்படை கொண்டு விசாரித்து வந்ததில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அப்பகுதியில் நடமாடிய வந்தது தெரிய வந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அச்சிறுவனை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி 33 என்பவர்தான் சங்கிலியை திருடியவர் என்று தெரியவந்துள்ளது. தற்போது அவர் கரூருக்கு சென்று தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்து விரைந்து சென்ற போலீசார் ராஜேஸ்வரி பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் திருட்டுக்கு உடந்தையாக இருந்த 12 ஆம் வகுப்பு சிறுவன் மற்றும் ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. ராஜேஸ்வரியை மகளிர் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மூதாட்டி கண்ணில் மிளகாய்த்தூளை தூவி விட்டு நகையை பறித்த இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.