கணவர் இல்லாத நேரத்தில் 2 காதலர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்… ரூ.10 லட்சம் நகையை திருடி விட்டு அவரே செய்த தில்லாலங்கடி வேலை… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

மராட்டிய மாநில மும்பை கோரைக்கான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே ஊர்மிளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது மட்டுமல்லாமல் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். சமூக ஊடகம் மூலமாக தொடர்பு கொண்டு கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்.

மற்றொரு பக்கம் அவருடைய மகளின் காதலன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது ஊர்மிலாவுக்கு மகளின் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளின் காதலனுடன் ஊர்மிளா உல்லாசமாக இருந்துள்ளார். மகளின் காதலனுடன் அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில் ஊர்மிளா தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்த நகைகளை விற்று பத்து லட்ச ரூபாய் பணத்தை அவருடைய காதலரின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார்.

   

வீட்டிலிருந்த நகை ஒன்றை அவருடைய மகளின் காதலனுக்கும் கொடுத்துள்ளார். இரண்டு காதலர்களுக்கு நகைகளை விற்று கொடுத்து விட்டதால் கணவனிடம் மாட்டிக் கொள்வோம் என்று ஊர்மிளாவுக்கு பயம் வந்துள்ளது. இதனால் நகைகளை திருடியதாக அவருடைய அப்பாவி கணவர் மீது பழி சுமத்தியுள்ளார். ஆனால் தான் நகையை எடுக்கவில்லை என்று ரமேஷ் கூறி வாக்குவாதம் செய்தார். உடனே ஊர்மிலா காவல் நிலையத்துக்குச் சென்று தன் கணவர் திருடி விட்டதாக புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

   

ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் ஊர்மிளா மற்றும் அவருடைய கணவரின் செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தபோது ஊர்மிலா வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடைய மகளின் காதலனுடனும் அடிக்கடி பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பிறகு தீவிர விசாரணை நடத்தியதில் உண்மையை ஊர்மிளா ஒப்புக்கொண்டதால் இதில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.