நாட்டையே உலுக்கிய “நீல நிற டிரம்”… திருமணத்திற்கு வந்த தோழிகள் கொடுத்த பரிசு… “இன்னும் வாழ கூட ஆரம்பிக்கல” அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை..!!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

ஒரு திருமண விழாவின்  மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் வழங்கிய பரிசுப்பொருளை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதுகுறித்து வைரலாகும் வீடியோவில், “மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் சில பெண்கள் கருப்பு கண்ணாடி அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த நீலநிற டிரம்மை பரிசாக வழங்கியுள்ளார்கள்.

இந்த நீல டிரம் மார்ச் 2025 இல் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் நடந்த ஒரு பயங்கரமான கொலையுடன் தொடர்புடையது. சௌரப் ராஜ்புத் என்ற நபர் அவரது மனைவி மற்றும் காதலரால் கொலை செய்யப்பட்டார், மேலும் அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டு, அதேபோன்ற நீல டிரம்மில் அடைக்கப்பட்டு சிமெண்டால் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ‘நீல டிரம்’ பற்றிய கணவர்கள் தொடர்பான பல மீம்ஸ்கள் மற்றும் ரீல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

   

   

இந்த வீடியோ @bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றத் தொடங்கினர். கோபமடைந்த ஒரு பயனர், “இது என்ன அபத்தமான வழி? ஒரு முக்கியமான பிரச்சினை கூட கேலி செய்யப்பட்டுள்ளது” என்று எழுதினார். அதே நேரத்தில், மற்றொரு பயனர், “எந்த மகனையாவது இப்படிச் சந்திக்க நேர்ந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” என்ற கேள்வியை எழுப்பினார்.