திருச்சியில் தென்னூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடைய மனைவி சுமதி (52). இவர் காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். மூன்று மாடிகள் கொண்ட அந்த கடையில் ஹார்டுவேர் பொருட்களை மாடிக்கு ஏற்றுவதற்கு திறந்த நிலையில் ஆன லிப்ட் ஒன்று உள்ளது. நேற்று இரவு சுமதி பொருள்களை ஏற்றியபடி லிப்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த விபத்தில் சுமதியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லிப்டில் சென்றபோது அவருடைய தலை பக்கவாட்டு தடுப்பில் மோதியதில் உயிரிழந்தாரா அல்லது அவரது தலை சிக்கி கொண்டதில் உயிரிழந்தாரா என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை வீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
