ஆசிய கோப்பை இந்த முறையும் இந்தியாவுக்கு தான்.. கெத்தாக பேசிய அஸ்வின்..!!

By Divyamayakannan on புரட்டாதி 12, 2025

Spread the love

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது. 20 ஓவர் போட்டிகளில் தரவரிசையின் படி இந்தியாவே கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு முறை ஆசிய கோப்பையை வென்று மற்றும் 2024ல் டி20 உலக கோப்பையும். ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு சவாலாக எந்த ஒரு அணியும் இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆஃப்ரோ-ஆசிய கோப்பை என்ற பெயரில் நடத்தலாம். தற்போது இந்தியா ஏ அணி என மாறிவுள்ளது. வங்கதேசத்தை பற்றி பேச எதுவும் கிடையாது. பலரும் ஆசிய கோப்பையை மற்ற அணி வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள்.

குல்தீப் – வருண் ஆகியோரை எந்த ஒரு அணியும் எதிர்கொள்ள போவதில்லை. ஆசிய கோப்பை 2026 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் சிறந்த அளவுகோலாக இருக்காது. இந்தியா 170+ ரன்கள் ஆப்கானிஸ்தான் பௌலர்களுக்கு எதிராக அடிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தியருக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சேஸ் செய்ய முடியுமா? 155 ரன்கலிலேயே இந்தியாவை தோற்கடிப்பது தான் அவர்களது வெற்றி. பொதுவாகவே t20 போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணி தான் பெறப் போகிறது என்று நிதர்சனமாக பேசினார்.