“எதுக்குடா இப்படி பண்ண”… தூங்கும் சிங்கத்தை சீண்டி பார்த்த நபர்… நொடிப்பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்… திகிலூட்டும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

பொதுவாகவே வனவிலங்குகளுடன் விளையாடும் என்ன உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் அது தொடர்பான வீடியோ ஒன்றை வைரலாகி வருகிறது. தூங்கும் சிங்கத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பழமொழி ஒன்று உள்ளது. இது தற்போது உண்மையாக மாறி உள்ளது. சிங்கத்தின் கூண்டுக்கு அருகே சென்ற நபர் ஒருவர் அதை கிண்டல் செய்ததை தொடர்ந்து சில நிமிடங்களில் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். அமைதியாக இருந்த சிங்கம் திடிரென்று பாய்ந்து அந்த நபரின் காலை தன்னுடைய பற்களால் கடித்து பிடித்துள்ளது. வலுவான சிங்கத்தின் பிடியில் சிக்கி அந்த நபர் வலியால் கதறி துடித்துள்ளார்.

அருகில் இருந்த மற்றொரு நபர் குச்சியால் மிரட்டியதன் மூலம் சிங்கம் அந்த நபரின் காலை விடுவித்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அந்த நபர் உயிர் தப்பினார். சிங்கம் முழு வலிமையை பயன்படுத்தவில்லை என்றாலும் அதன் பிடியின் ஆபத்து தன்மை மிகுந்தது என்பதும் இது எவ்வளவு தீவிரமாக முடிய கூடும் என்பதையும் வீடியோ வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் தவறான செயல்கள் பொழுது போக்காக தோன்றினாலும் அது பெரிய அபாயமாக மாறக்கூடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.