பாஜகவில் இருந்து பதவி நீக்கம்… ஒன்றுமே செய்யாத அண்ணாமலை… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட பிரபலம்…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறி இருந்ததால் இபிஎஸ் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் மோதல் அதிகரித்து வருகிறது.

இதனிடையே அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவிலும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியை நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை தான் சிறப்பாக வழி நடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பணிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது.

   

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட பிறகு அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. தற்போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அண்ணாமலை தமிழக பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாகவும் மிக வேகமான செயல்பாடுகளை அவருடைய பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது நலனுக்காக செயல்பட்டாலும் கட்சியின் நலனுக்காக அவர் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.