மறந்துடாதீங்க, செப்டம்பர் 30 தான் கடைசி… வங்கி கணக்குகள் முடக்கம்… வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

உங்களிடம் வங்கி கணக்கு இருந்தால் இந்த வேலையை உடனே முடித்து விடுங்கள். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி கணக்கு இருக்கும் அனைவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கேஒய்சி செயல்முறை தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் கேஒய்சி புதுப்பிக்க வில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு செயலிழக்கப்படலாம். இந்திய ரிசர்வ் வங்கி வங்கி அமைப்பின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கேஒய்சி புதுப்பிப்பை கட்டாயமாக்கியுள்ளது.

வங்கி மோசடி மற்றும் தவறான செயல்பாடுகளை தடுப்பதற்கு வாடிக்கையாளர்களின் அடையாளத்தை அவ்வப்போது சரி பார்ப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் கேஒய்சி புதுப்பிப்பு பிரச்சாரத்தை 2025 ஜூலை 1 முதல் தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை இயங்கும். கேஒய்சி புதுப்பிக்க கிராமங்களில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள ஆதார் பஞ்சாயத்து முகாமுக்கு செல்லலாம். அங்கு ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி புதுப்பித்து கொள்ளலாம்.

   

நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிழக்குச் சென்று உங்களிடம் உள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து கே ஒய் சி அப்டேட் முடித்து விடலாம். ஒருவேளை இதை செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும். அதேசமயம் ஏடிஎம், நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ போன்ற வங்கியின் பல வசதிகள் தற்காலிகமாக மூடப்படலாம் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனவே வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிப்பு கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.