இயற்கையை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் சிலர் எடுக்கக்கூடிய துணிச்சலான செயல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சூப்போல் மாவட்டத்தில் காட்டில் பறவைகளை வேட்டையாடிய நபர் ஒருவரை பெயர் வெளியிடாத உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் திடிரென்று நிறுத்தி விசாரித்துள்ளார். அவர் மறைத்து வைத்திருந்த வெள்ளை பறவையை காட்டச் சொல்லி கூறியபோது, அது காயமடைந்து ரத்தம் சொட்டுவதை கண்டு ஆத்திரம் அடைந்த பத்திரிக்கையாளர் வேட்டைக்காரனை கடுமையாக அறைந்து இந்த கொடூர செயலை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. உடனடி கர்மா கேமராவில் பதிவாகியது என தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் இயற்கை மற்றும் பறவைகளை பாதுகாக்கும் உணர்வு தெளிவாக வெளிப்படுகின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் பறவைகள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பை சமூகத்தில் மீண்டும் வலியுறுத்துகிறது. உயிர்களுக்கு எதிரான கொடுமையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ எடுத்துரைக்கும் கருத்தாகும்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
