மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பைக்குகளில் வந்த இளைஞர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் தெருவில் நடந்து செல்கிறார்கள் . அப்போது எதிர்பக்கத்திலிருந்து இரண்டு பேர் பைக்கில் வருகிறார்கள் .
View this post on Instagram
சிறிது நேரத்தில் அந்தப் பெண்களின் கழுத்தில் இருந்த தாலியை அந்த இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பியோடுகிறார்கள். பிறகு அந்தப் பெண்கள் கூச்சலிட்டதால் கூட்டம் கூடி உள்ளனர். ஆனால் அங்கிருந்து குற்றவாளிகள் தப்பித்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
