“தாயுடன் செல்பி…” சோசியல் மீடியாவில் பதிவிட்டு மகன் செய்த காரியம்…. பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 11, 2025

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் பெருமாள்ராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன சேகர்(52). இவர் ரயில்வே வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ஹேமலதா. இவர் சிறையில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வருகின்றனர். இதனால் மதனசேகர் தனது தாய் புண்ணியவதியுடன் வசித்து வந்தார்.

வங்கியில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக மதன சேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மதன சேகரும், அவரது தாயும் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

   

முன்னதாக மதன சேகர் தனது தாயுடன் செல்ஃபி எடுத்துள்ளார். பின்னர் செல்பி புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.