சேலம் மாவட்டத்தில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(22). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செல்விக்கு வேம்பநேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ் செல்வி உறவினர்களை பார்க்க கோனேரிவளவு கிராமத்திற்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் தமிழ்செல்வி வரவில்லை என உறவினர்கள் கூறியுள்ளார். அவர் வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வியின் தாய் அலமேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் காணாமல் போன தமிழ் செல்வியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
