அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாக ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி சமீபத்தில் இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையை நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில் மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது .செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், அதிமுக வலிமையாக உள்ளது, கூட்டணி கட்சி உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்
