மக்களே உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா…? அப்போ உடனே கிளம்புங்க…. அதிகரித்து வரும் இன்புளூயன்சா காய்ச்சல்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!

By Srimathi on புரட்டாதி 10, 2025

Spread the love

1918 ஆம் ஆண்டு “இன்புளூயன்சா” எனப்படும் ப்ளு காய்ச்சல் நோய் பரவி, இதற்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். பின் இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நோயின் வீரியத்தை மருத்துவ நிபுணர்கள் குறைத்தனர். பின் இது சாதாரண காய்ச்சல் போன்று மாறியது.

கோடை காலம் முடிவடைந்து பருவ காலம் தொடங்கும் காலகட்டத்தில், இந்த வைரஸ் தொற்றுப் பரவுவது வழக்கம். இந்த காய்ச்சலுக்கு இருமல், சளி, தலைவலி, உடல் சோர்வு, தொண்டை கட்டுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். காய்ச்சல் பாதித்தவர்களுக்கு காய்ச்சல் குறைந்தாலும் இருமல் மற்றும் சளி குறைய 2 வாரங்கள் ஆகிறது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சில தகவல்களை கூறியுள்ளனர்.

   

அதில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வைரஸ் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், காய்ச்சல், இருமல், சளி, தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது. மேலும் மருத்துவமனைக்கு வரும் 2 % பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 70 % பேருக்கு இன்புளூயன்சா வகை காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களுக்கு டெங்கு, டைபாய்டு மற்றும் சாதாரண வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போது தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழக பொது துறை தெரிவித்துள்ளது.