“ஏங்க ஒரே ஒரு நாள் வாங்க”…. வற்புறுத்திய மனைவி… வர மறுத்த கணவன்… திருமணமான ஆறே மாதத்தில் நடந்த துயர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

திருப்பூரில் கணவன் சினிமாவுக்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாண்டி ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜீவா என்பவரும் அதே பகுதியை சௌமியா (23) என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவர்களுடைய கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில் கடந்த வாரம் தன்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்லுமாறு ஜீவாவிடம் சௌமியா வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் வேலை அதிகமாக இருந்ததால் பல காரணங்களைச் சொல்லி மனைவியின் ஆசையை ஜீவா நிராகரித்துள்ளார். கணவனிடம் தொடர்ந்து கூறியும் தன்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்லாததால் விரக்தி அடைந்த சௌமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனே விரைந்து சென்ற போலீசார் சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.