“என்னை மன்னிச்சிடுங்க” இப்போ நான் வருந்துகிறேன்… 21 ஆண்டுகளுக்கு முன்.. தொலைந்து போன செயின் வந்த பார்சலில் உருக்கமான கடிதம்…!!

By Soundarya on புரட்டாதி 8, 2025

Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. 65 வயதான இவர் கடந்த 21 வருடங்களுக்கு முன்பாக டாக்டரை சந்திக்க சென்ற போது அவருடைய மூன்றரை சவரன் தங்கச் செயின் தொலைந்து போனது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீட்டிற்கு வந்த பார்சலை  பிரித்து பார்த்த போது கதீஜாவின் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். அதாவது பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த அந்த பார்சலில் மூன்றரை சவரன் தங்க செயின் இருந்தது. இது குறித்து கதீஜா கூறுகையில், “கடந்த 21 வருடங்களுக்கு பிறகு முன்பு நானும், என் மகனும் வளாஞ்சரி பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க போனோம். அப்போது என்னுடைய நகையை தொலைத்துவிட்டேன். பயணம் செய்த பகுதிகளெல்லாம் தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை.

திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒருவாரம் கழித்து தான் என் வீட்டில் சொன்னேன். வெளிநாட்டில் பணிபுரியும் மற்றொரு மகன் அந்த செயினுக்கு பதிலாக புதிய செயினை வாங்கி கொடுத்தார். எதிர்பாராத விதமாக இப்போது அந்த செயல் வந்துள்ளது.  முதலில் எங்களால் இதை நம்ப முடியவில்லை. அதன் பிறகு அந்த கடிதம் தான் எங்களை நம்ப வைத்தது. அந்த கடிதத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடமிருந்து தொலைந்து போன ஒரு நகை எனக்கு கிடைத்தது. அது என் வாழ்க்கை சூழ்நிலையாக பயன்படுத்திக் கொண்டேன். இன்று நான் அதை நினைத்து வருந்துகிறேன். அதனால் இந்த கடிதத்தோடு அது போன்ற ஒரு தங்கச் செயினை வைத்துள்ளேன். நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் உட்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்ததாக்க கூறியுள்ளார்.