ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். பிறகு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை காண அவரோடு மார்க்கெட்டுக்கு சென்றிருந்தார் .வீடு திரும்பும் வழியில் காரில் வந்த ஒரு ஆண் லிப்ட் கொடுப்பதாக கூறி அந்த மாணவியை காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சற்று நேரத்தில் காருக்குள் வைத்து அந்த மாணவியை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றார்கள். பிறகு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றார்கள். புகாரில் சிக்கியவர் திருமணமானவர் என்று தெரியவந்துள்ளது. தலைமறைவில் இருக்கும் அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
