இது உனக்கே ஓவரா தெரியலையாமா?… ஒத்த சமோசாவுக்காக ஊரையே கூட்டி கணவனை வெளுத்து வாங்கிய மனைவி… இணையத்தை அதிரவிடும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பீட்டை சேர்ந்த சிவம் மற்றும் சங்கீதா கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் ஒரு சமோசா வாங்காததை காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். சங்கீதா தன் கணவரிடம் சூடான சமோசா வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் தவறி விழுந்ததால் சிவம் சமோசா வாங்காமல் வீடு திரும்பியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சங்கீதா முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிறகு தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து கணவனையும் அவருடைய குடும்பத்தினரையும் தாக்கியுள்ளார். சண்டையின்போது சங்கீதாவின் உறவினர்கள் பெல்ட் மற்றும் கட்டை கொண்டு சிவத்தையும் அவருடைய குடும்பத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த சிவத்தின் மைத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.