கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் அஜித்குமார், தற்பொழுது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். பல இயக்குனர்களுடன் பணியாற்றிய இவர், இயக்குனர் பாலா உடன் பணியாற்றும்போது கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார்.
“நான் கடவுள்” படத்தில் முதலில் அஜித் நடித்த கமிட்டாகி, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. பின் பாலாவின் கண்டிஷன்களை ஏற்க மறுத்த அஜித், படப்பிடிப்பிலிருந்து விலகினார். மேலும் அதே போல ஸ்கிரிப்ட் தயார் செய்ய தாமதம் ஏற்பட்டதால், பாலா என்ன செய்கிறார்? என்று பார்க்க பாம் குரோ ஹோட்டலுக்கு சென்றுள்ளார், அஜித்.
அங்கு பாலா எங்கே? விசாரித்த பொழுது, அவரின் திரையுலக நண்பர்களும் உடன் இருந்துள்ளனர். அங்கு இவருக்கும் பாலா நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி தொடங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன், நடிகை சங்கீதாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் பாலா சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு ஓட்டல் அறையில் வைத்து அஜித்தை அடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, “நான் அஜித்தை அடித்தேன்! என்று சொல்லுவதெல்லாம் பத்திரிக்கையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் சிறு மனஸ்தாபம் வந்தது உண்மைதான்” என்று கூறினார்.
மேலும் அந்த அறையில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியதற்கு, “அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி, என்னிடம் ஏன் கேக்குறீங்க” என்று பாலா பதிலளித்தார்.
